தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மோட்டார் வாகன ஆய்வாளர் தேர்வு ஒத்திவைப்பு - chennai latest news

மோட்டார் வாகன ஆய்வாளர் நிலை இரண்டுக்கான நேர்முகத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

postponement-of-motor-vehicle-inspector-exam
postponement-of-motor-vehicle-inspector-exam

By

Published : Jul 13, 2021, 3:48 PM IST

Updated : Jul 13, 2021, 5:17 PM IST

சென்னை: மோட்டார் வாகன ஆய்வாளர் நிலை இரண்டுக்கான நேர்முகத் தேர்வு நீதிமன்ற வழக்கின் காரணமாக ஒத்திவைக்கப்படுகிறது எனத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "மோட்டார் வாகன ஆய்வாளர் நிலை இரண்டு பதவிக்கான நேர்முகத் தேர்வானது வரும் 19ஆம் தேதிமுதல் 24ஆம் தேதி வரையில் தேர்வாணையத்தின் அலுவலகத்தில் நடைபெறும் என ஜூலை 1ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் மீது வழங்கப்பட்ட தீர்ப்பின்படி, மோட்டார் வாகன ஆய்வாளர் நிலை இரண்டு பதவிக்கான நேர்முகத் தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுகிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு

Last Updated : Jul 13, 2021, 5:17 PM IST

ABOUT THE AUTHOR

...view details