தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் 80 வயதை கடந்த 12 லட்சத்திற்கும் அதிகமான வாக்களர்களுக்கு தபால் ஓட்டு! - இறுதி வாக்களர் பட்டியல்

தமிழ்நாட்டில் வர இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலுக்காக இன்று வெளியிடப்பட்ட இறுதி வாக்களர்கள் பட்டியலின்படி, 80 வயதை கடந்த 12 லட்சத்து 98 ஆயிரத்து 406 பேர் தபால் வாக்குகள் மூலம் தங்களது வாக்குகளை செலுத்தவுள்ளனர்.

80 வயதைக் கடந்தவர்களுக்கு தபால் ஓட்டு
80 வயதைக் கடந்தவர்களுக்கு தபால் ஓட்டு

By

Published : Jan 20, 2021, 6:17 PM IST

சென்னை: இந்தாண்டு நடக்க இருக்கிற சட்டப்பேரவைத் தேர்தலுக்கான, இறுதி வாக்காளர் பட்டியலை தமிழ்நாடு தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகு இன்று வெளியிட்டார்.

இந்தத் தேர்தலில் 13 லட்சத்து 9 ஆயிரத்து 311 பேர் முதல் முறையாக தங்களின் வாக்குகளை செலுத்த உள்ளனர்.

முன்னதாக கரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக 80 வயதுக்கு மேற்பட்டோருக்கு தபால் வாக்கு வழங்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் 80 வயதுக்கு மேற்பட்ட 12 லட்சத்து 98 ஆயிரத்து 406 பேர் தபால் வாக்குகள் மூலம் தங்களது ஓட்டுகளை செலுத்த உள்ளனர்.

இன்று வெளியடப்பட்ட பட்டியலின்படி, வயது வாரியாக மொத்தமாக 6 கோடியே 26 லட்சத்து 74 ஆயிரத்து 446 வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

இதையும் படிங்க:சாதிவாரியான கணக்கெடுப்பு நீதியரசர் குலசேகரன் தலைமையில் முதல் கூட்டம்!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details