தபால் துறையில் தபால் காரர், உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டும் நடத்தப்படும் என்ற அறிவிப்பை எதிர்த்து திமுக எம்.எல்.ஏ எழிலரசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
ஏற்கனவே இந்த வழக்கு விசாரணையின்போது, தபால் துறை தேர்வு நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணிய பிரசாத் அமர்வில் மீண்டும் இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தபால் துறை தேர்வு தமிழ்நாட்டில் இனி தமிழிலும் நடத்தப்படும் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், தபால் துறை தேர்வைஆங்கிலம் மற்றும் மாநில மொழிகளில் எழுதலாம் என மே 10ஆம் தேதி பிறப்பித்த உத்தரவு தொடர்ந்து பின்பற்றப்படும் என்றும் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டும் தேர்வு எழுத வேண்டும் என ஜூலை 11ஆம் தேதி பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்பட்டிருக்கிறது எனவும் மத்திய அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது.