தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அஞ்சல் துறை தேர்வு விவகாரம்; வழக்கை முடித்து வைத்த உயர்நீதிமன்றம்! - case

சென்னை: அஞ்சல் துறை தேர்வை தமிழில் எழுதலாம் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டதைத் தொடர்ந்து, இதுகுறித்து திமுக சட்டப்பேரவை உறுப்பினர் தொடர்ந்த வழக்கை முடித்து வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அஞ்சல் துறை தேர்வு விவகாரம்; வழக்கை முடித்து வைத்த உயர்நீதிமன்றம்!

By

Published : Jul 31, 2019, 1:59 AM IST

தபால் துறையில் தபால் காரர், உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது. இதுதொடர்பாக, மே 10ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பில் ஆங்கிலம் அல்லது அந்தந்த மாநில மொழிகளில் தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.

பின்னர், இத்தேர்வு ஆங்கிலம், இந்தியில் மட்டும் நடத்தப்படும் என ஜூலை 11ஆம் தேதி அறிவிப்பு வெளியானது. தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகள் புறக்கணிக்கப்பட்டன. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சிகளும் இந்த அறிவிப்பை கடுமையாக எதிர்த்தன.

இந்த அறிவிப்பை ரத்து செய்யக்கோரி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் எழிலரசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதிகள் மணிகுமார், சுப்ரமணியம் பிரசாத் அமர்வு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

தபால் துறையில் பணிபுரிபவர்கள், தபால் துறை தேர்வை மாநில மொழிகளில் எழுத அனுமதித்து மே 10ஆம் தேதியன்று வெளியான அறிவிப்பு தொடரும் என உயர்நீதிமன்றம் கூறியது. மத்திய தகவல் தொழில் நுட்பத்துறை புதிய அறிவிப்பாணையை ஜூலை 23ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளதாகக் கூறி, அதன் நகலை மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், திமுக சட்டப்பேரவை உறுப்பினர் தொடர்ந்த வழக்கை முடித்து உத்தரவிட்டனர். இதன் காரணமாக தபால் துறை தேர்வுகளை அத்துறையில் பணிபுரியும் ஊழியர்கள் பழைய முறைப்படி மாநில மொழியில் தேர்வு எழுதலாம். ஆனால், அரசு பணியாளர்களுக்கான தேர்வை இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே எழுத முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details