தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி நடைபெறயிருக்கிறது. இதுகுறித்து, சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு தலைமைத்தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகு கூறுகையில், 'வருகிற 12ஆம் தேதி முதல் தற்போது வரை 59 நபர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். அதில் 58 ஆண்கள் 1 பெண் வேட்பாளர் அடங்குவர்.
மேலும், வேட்பாளர்களின் செலவு கணக்குகள் கண்காணிக்கப்படும். இதுவரை, உரிய ஆவணங்கள் இன்றி 109.45 கோடி ரூபாய் மதிப்புள்ள ரொக்கம் மற்றும் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. முதல்முறை வாக்காளர்களுக்கு இதுவரை 16 லட்சம் வாக்காளர் அட்டை, விரைவு அஞ்சல் மூலம் அனுப்பப்பட்டுள்ளது.
இதையடுத்து, நட்சத்திரப் பேச்சாளர்களுக்கு இதுவரை 455 அனுமதி அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதில், தேர்தல் விதிமுறைகள் மீறும் நபர்கள் மீது சி - விஜிலென்ஸ் மூலம் புகார் அளிக்கலாம். இதுவரை 1,120 புகார்கள் வந்துள்ளன.