சென்னை:போரூர் அடுத்த ஆலப்பாக்கத்தைச் சேர்ந்தவர் அரிவிஸ்வநாத் (28), கடந்த மாதம் மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், ஜூலை மாதம் 29ஆம் தேதி தனது வைஃபை டெபிட் கார்டு தொலைந்து விட்டதாக கூறிப்பிட்ட அவர், அதற்கு அடுத்த இரண்டு நாட்களில் தனது கார்டை பயன்படுத்தி ரூ.15ஆயிரம் வரை பணம் எடுத்துள்ளதாகவும், அதன் பிறகு அந்த கார்டை வங்கியில் கூறி பிளாக் செய்து விட்டதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த புகார் சைபர் கிரைம் போலீசாருக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து, மதுரவாயல் ஆய்வாளர் ரவீந்திரன், உதவி ஆய்வாளர் ராஜா சிங், தலைமை காவலர் விஜயகுமார் ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைத்து தீவிரமாக கண்காணித்து வந்த நிலையில், பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம், கே.கே. நகரை சேர்ந்த சரவணன் (28), என்பவரை கைது செய்து விசாரித்தபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், " காட்டுப்பாக்கத்தை சேர்ந்த சரவணன் காதல் திருமணம் செய்துகொண்டு தனது மனைவி மற்றும் 4 வயது குழந்தையுடன் வசித்து வருகிறார். இவரது குழந்தைக்கு பிறக்கும்போதே இதயம் சம்பந்தமான பிரச்னை இருந்துள்ளது.