தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரை நிர்வாணமாக கொள்ளையடிக்க நோட்டம் பார்த்த நபரின் சிசிடிவி காட்சி! - அரை நிர்வாணமாக கொள்ளையடிக்க நோட்டம் பார்த்த நபரின் சிசிடிவி காட்சி

சென்னை: போரூரில் நள்ளிரவு நேரங்களில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அரை நிர்வாணமாக வந்து கொள்ளையடிக்க நோட்டம் பார்க்கும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொள்ளையடிக்க நோட்டம் பார்த்த நபரின் சிசிடிவி காட்சி

By

Published : Nov 22, 2019, 7:48 PM IST

சென்னை போரூரில் தாம்பரம் - மதுரவாயல் இணைப்பு சாலையை ஒட்டியுள்ள சமயபுரம் 5ஆவது தெருவில் உள்ள குடியிருப்புகளில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்புக் கேமராக்கள் காலை நேரங்களில் அதன் திசை மாறி இருப்பதும் அதனை வீட்டு உரிமையாளர்கள் சரி செய்வதுமாக தினந்தோறும் இருந்து வந்துள்ளது. இதனால், சந்தேகமடைந்த குடியிருப்புவாசிகள் கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது அதிர்ச்சியடைந்தனர்.

நள்ளிரவு நேரங்களில் முகத்தை மறைத்தபடி பனியன் அணிந்து கொண்டு வீட்டின் சுவர் ஏறி குதித்து உள்ளே வரும் அடையாளம் தெரியாத நபர், கையில் ஒரு டார்ச் லைட்டை வைத்துக்கொண்டு வீடுகளில் ஆட்கள் நடமாட்டம் உள்ளதா என நோட்டமிடுகிறார்.

மேலும், அவர் பின்பகுதியில் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களையும் வைத்துள்ளார். அது மட்டுமின்றி கையில் நீளமாக ஒரு கட்டையை வைத்துக்கொண்டு கண்காணிப்புக் கேமராவில் தனது முகம் பதியாமல் இருப்பதற்காக கேமராக்களை மேல்நோக்கி பார்க்கும்படி திருப்பி விட்டு ஒவ்வொரு வீடாக சென்று நோட்டமிடுகிறார். ஜன்னல் கதவைத் திறந்து வீட்டில் ஆட்கள் நடமாட்டம் உள்ளதா என்றும் சோதனை செய்கிறார்.

இது குறித்து வளசரவாக்கம் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. காவல் துறையினர் தினந்தோறும் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தால் இதுபோன்ற மர்ம நபர்களின் நடமாட்டம் இருக்காது என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கொள்ளையடிக்க நோட்டம் பார்த்த நபரின் சிசிடிவி காட்சி

மேலும், காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு இரவு நேரங்களில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித்திரியும் அடையாளம் தெரியாத நபரை கூடிய விரைவில் கைது செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க : குற்றவாளிகளை குறிவைக்கும் சிசிடிவி: சென்னை காவல்துறையின் பலே ஐடியா!

ABOUT THE AUTHOR

...view details