ETV Bharat Tamil Nadu

தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கொரோனாவால் நீண்ட விடுப்பு கேட்ட மாணவன் - வைரலான கடிதம் - மாணவனுக்கு மருத்துவ பரிசோதனை

சென்னை: கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதால் தனக்கு நீண்ட விடுப்பு அளிக்குமாறு அரசுப் பள்ளி எட்டாம் வகுப்பு மாணவன் எழுதிய கடிதம் சமூக வலை தளங்களில் வைரலாகியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனாவால் நீண்ட விடுப்பு கேட்ட மாணவன் கடிதம்
கொரோனாவால் நீண்ட விடுப்பு கேட்ட மாணவன் கடிதம்
author img

By

Published : Mar 10, 2020, 6:49 PM IST

Updated : Mar 10, 2020, 7:10 PM IST

கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி பலர் இறந்து வருகின்றனர். இந்த வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில் மேலும் பரவாமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைகளில் தனியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க, தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

அது குறித்து வதந்தியை யாரும் பரப்பக் கூடாது எனவும்; எச்சரிக்கை விடுத்து வரும் நிலையில் சென்னை - போரூர் அடுத்த முகலிவாக்கத்தில் உள்ள அரசுப் பள்ளியில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவன் ஒருவன் தமக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டிருப்பதாக ஒரு கடிதத்தை எழுதி விடுப்பு கேட்டது, சமூக வலைதளத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

அந்த கடிதத்தில் அந்த மாணவன், 'தான் முகலிவாக்கத்தில் உள்ள அரசுப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருவதாகவும் கொரோனா வைரஸ் எளிதில் பரவக்கூடியது. தனக்கு சளி, காய்ச்சல், அறிகுறி தெரிகிறது. எனவே மற்ற மாணவர்கள் நலன் கருதி நீண்ட நாட்கள் விடுப்பு எடுக்கலாம் என அரசு சுற்றறிக்கை செய்துள்ளது. சளி, காய்ச்சல், அறிகுறி உள்ளவர்கள் வரவேண்டாம் என்பதால், நான் மற்ற மாணவர்களின் நலன் கருதி நீண்ட விடுப்பு எடுக்கிறேன். எனது விடுப்பு நாட்களை வருகை நாட்களாக பதிவு செய்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்’ என எழுதியுள்ளார்.

இந்த நிலையில் இன்று அந்த மாணவன் மற்றும் அவனது பெற்றோரை பள்ளிக்கு அழைத்த பள்ளியின் தலைமையாசிரியர் இதுகுறித்து விசாரித்தபோது, 'தனது மகன் விளையாட்டுத்தனமாக அந்த கடிதத்தை எழுதியதாகவும் தனது மகனின் நண்பர்கள் அந்த கடிதத்தை சமூக வலைதளங்களில் படமெடுத்து பதிவிட்டதாகவும், இனிஇதுபோன்ற தவறுகளை தனது மகன் செய்ய மாட்டார்' என அந்த மாணவனின் பெற்றோர் பள்ளி தலைமை ஆசிரியரிடம் கடிதம் எழுதி கொடுத்துள்ளனர்.

கொரோனாவால் நீண்ட விடுப்பு கேட்ட மாணவன் கடிதம்

மேலும் அந்த மாணவன் கடிதம் எழுதி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதால், அந்த மாணவனுக்கு மருத்துவ பரிசோதனை செய்து அதற்கான சான்றுகளை அளிக்குமாறு, ஆசிரியர்கள் அந்த மாணவனை பெற்றோருடன் அனுப்பி வைத்துள்ளனர்.

இதையும் படிங்க:சீனாவில் குறைந்த கொரோனா: வூஹானுக்குப் பறந்த ஜின்பிங்

Last Updated : Mar 10, 2020, 7:10 PM IST

ABOUT THE AUTHOR

...view details