தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியது என்ன? - முழுப்பின்னணி! - பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா

பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா மிகவும் மோசமான இயக்கம் எனவும், பல்வேறு பயங்கரவாத அமைப்புகளுக்கு பின்புலமாக செயல்பட்டு வரும் இவர்கள் நம் நாட்டில் பல முகமூடிகளை அணிந்து செயல்பட்டு வருகின்றனர் என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றஞ்சாட்டி உள்ளார்.

பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா மிகவும் மோசமான இயக்கம் - தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு
பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா மிகவும் மோசமான இயக்கம் - தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

By

Published : May 6, 2022, 9:55 PM IST

சென்னை:நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் மறைந்த லெப்டினன்ட் ஜெனரல் சப்ரோடோ மித்ரா எழுதிய THE LURKING HYDRA என்ற புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டு பேசினார். அப்போது, “இந்த புத்தகம் ஒரு முக்கியமான ஆவணம். பயங்கரவாதத்திற்கு எதிரான வாதத்தை முன் வைக்கிறது. பயங்கரவாதத்திற்கு எதிராக போராடுவதில் இந்திய ராணுவம் அதிக திறன் வாய்ந்துள்ளதாக விளங்குகிறது.

மேலும் பல்வேறு நாடுகள் இந்தியா மீதான போரை நிகழ்த்தி உள்ளது. 1990ஆம் ஆண்டு தான் ராணுவத்தில் ஒரு பிரிவில் சேர்ந்த போது, பயங்கரவாதத்தை எதிர்ப்பது என்பது தினசரி வழக்கமான ஒன்றாக இருந்தது. அதேபோல் பிரதமர் மோடி 2014இல் பதவியேற்ற பின்பு, ராணுவத்தில் சில மாற்றங்கள் ஏற்பட்டன. பயங்கரவாதத்தை எதிர்த்து சண்டையிடுவதில் எந்தவித சமரசமும் செய்து கொள்ளவில்லை. அரசியல் லாபத்திற்காக வன்முறையைத் தூண்டும் அனைவரும் பயங்கரவாதிகள்.

அதுமட்டுமின்றி இந்திய நாடாளுமன்றம் தாக்கப்பட்ட போது, ராணுவம் அதனை மிகவும் திறமையாக பாதுகாத்தது. அதற்கு மிகப்பெரிய நன்றிகள்.புல்வாமா தாக்குதலுக்கு தகுந்த பதிலடியை நம்முடைய ராணுவத்தினர் திருப்பி வழங்கினர். கடந்த சில ஆண்டுகளாக நாடு அமைதியான முறையில் இருந்து வருகிறது. இந்தியாவுடன் காஷ்மீரை இணைத்த பிறகு அதிகளவில் சுற்றுலா பயணிகள் அங்கு வரத்தொடங்கி உள்ளனர். இதற்கு முன்பு அங்கு பயங்கரவாதம் மட்டுமே ஓங்கி இருந்தது. ஆனால் தற்போது அதுபோன்ற சூழ்நிலை அங்கு இல்லை .

பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா மிகவும் மோசமான இயக்கம். இவர்கள் பல முகமூடிகளை அணிந்து கொண்டு நம் நாட்டில் இயங்கி வருகின்றனர். பல்வேறு பயங்கரவாத இயக்கங்களுக்கு ஒரு பின்புலமாக அவர்கள் செயல்பட்டு வருகின்றனர்’’ எனப் பேசினார்.

ABOUT THE AUTHOR

...view details