சென்னை:ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதையின் உறுதித்தன்மை குறித்து இன்று (நவ.21) இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு (Minister sekar babu), சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி (Gagandeep Singh Bedi )ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "சென்னை 2.0 திட்டத்தின் கீழ் சென்னையில் நீர் தேங்கக் கூடிய பாலங்கள், சுரங்கப்பாதைகளை சீரமைக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த ஆட்சியாளர்கள் வடிகால் அமைப்புக்கு கோடிக்கணக்கில் திட்டங்கள் வகுத்து, அதை முறையாக செய்யவில்லை. அதனை சீர் செய்ய சிறிது காலம் தேவைப்படுகிறது. இதற்காக குழு அமைக்கப்பட்டுள்ளது.
வடிகால் இணைப்புகள் எங்கு போய் சேர வேண்டும் என்று உறுதி செய்யவில்லை, தவறாக உள்ள வடிகால் இணைப்புகளை மாநகராட்சி கணக்கெடுப்பு நடத்தி வருகிறது. இனி வரும் காலங்களில் சுரங்கப்பாதைகளில் மழை நீர் தேங்காத வகையில் திட்டம் வகுக்கப்படும்" என்று தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து பேசிய மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, "பூண்டி நீர் தேக்கத்தில் (Poondi reservoir) இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. அப்பகுதியில் தேங்கிய வெள்ள நீர் விரைவில் அகற்றப்படும். அப்பகுதி மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் 1,600 முகாம்களில் இன்று 10ஆவது மெகா தடுப்பூசி முகாம் (Mega vaccination camp) நடைபெறுகிறது. ஜனவரி 1ஆம் தேதி வாக்காளர் பட்டியல் முகாம் நடைபெற இருக்கிறது. ஆதார் அட்டை கொடுத்து புதிய வாக்காளர்கள் தங்களது பெயர்களை இணைத்து கொள்ளலாம்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: Heavy Rain Alert: 8 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்