சென்னை : கரையான்சாவடியில் இருந்து ஆவடி செல்லும் சாலையில் உள்ள சென்னீர்குப்பம் என்ற பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஓட்டல் ஒன்று உள்ளது. இங்கு, கடந்த சில தினங்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த கார்த்தி என்பவர் சிக்கன் வாங்கிச் சென்றுள்ளார். வீட்டிற்கு வாங்கிச் சென்றவர் வீட்டில் வைத்து சாப்பிட்டபோது, கறியில் எலும்பு இல்லாததால், ஆத்திரமடைந்ததாகக் கூறப்படுகிறது.
பின்னர் தனது நண்பருடன் ஓட்டலுக்கு வந்த அவர், சிக்கனில் எலும்பு எதுவும் இல்லை என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, அங்கிருந்த சப்ளையர் சாகுல் ஹமீதை கன்னத்தில் அறைந்துள்ளார். இதில், அவருக்கு காது கேட்காமல் போனதாகக் கூறப்படுகிறது.