தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மருந்து கடையில் கொள்ளை- வேலை முடிந்ததும் கடையை சாத்திவிட்டு சென்ற சமத்து திருடர்கள்

பூந்தமல்லியில் உள்ள மருந்து கடையில் பணம் மற்றும் போதை தரும் மாத்திரைகளை அள்ளிச்சென்ற அடையாளம் தெரியாத நபர்கள் கடையில் கொள்ளை அடித்துவிட்டு, கடையின் ஷட்டரை திருடியது தெரியாமல் இருக்க சாத்திவிட்டுச் சென்றுள்ளனர்.

By

Published : Jun 5, 2022, 3:42 PM IST

மருந்து கடையில் கொள்ளை- வேலை முடிந்ததும் கடையை சாத்திவிட்டு சென்ற சமத்து திருடர்கள்
மருந்து கடையில் கொள்ளை- வேலை முடிந்ததும் கடையை சாத்திவிட்டு சென்ற சமத்து திருடர்கள்

சென்னை:பூந்தமல்லி, லட்சுமிபுரம் சாலையில் ஏராளமான கடைகள் அமைந்துள்ளன. இங்கு நேற்று(ஜூன் 4) இரவு வழக்கம்போல் கடை உரிமையாளர்கள் கடையை மூடிவிட்டுச்சென்று விட்டனர். அங்கு நள்ளிரவில் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் இரண்டு பேர் மருந்துக்கடை ஒன்றை நோட்டமிட்டு திருடியுள்ளனர்.

அந்த இருவரில் ஒருவன் மோட்டார் சைக்கிளில் அமர்ந்து கொண்டும் மற்றொரு நபர் சாவகாசமாக இறங்கிச்சென்று இரும்புக்கம்பியால் மருந்து கடையின் பூட்டை உடைத்து, திறந்து உள்ளே சென்று கல்லாபெட்டியில் இருந்த ரூ.25 ஆயிரம் பணம் மற்றும் நறுமணப் பொருட்கள், போதை தரக்கூடிய ஊசி மற்றும் மாத்திரைகளை அள்ளிச்செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகின.

அவர்கள் திருடிச்சென்றபோது அந்த வழியாக சென்ற ஒரு நபரும் அவர்களை ஆச்சர்யத்துடன் பார்த்து விட்டுச்செல்லும் காட்சிகளும் பதிவானது. பொதுமக்கள் மிகுந்த பகுதியிலும் போலீஸ் ரோந்துப்பணியில் ஈடுபடாததால் இந்த பகுதியில் கொள்ளைச்சம்பவங்கள் நடந்து வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

மருந்து கடையில் கொள்ளை- வேலை முடிந்ததும் கடையை சாத்திவிட்டு சென்ற சமத்து திருடர்கள்

பின்னர் இதே நபர்கள் அதன் அருகிலேயே இருந்த மற்ற இரண்டு கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது இதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. கடையின் ஷட்டரை பூட்டை உடைத்து உள்ளே சென்ற அடையாளம் தெரியாத நபர் கடையில் பொருட்களைத் திருடி விட்டு வெளியே வந்த போது கடையின் ஷட்டரை சாத்தி விட்டுச் சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதே தெருவில் அடுத்தடுத்து 3 கடைகள் உடைக்கப்பட்டு கொள்ளை சம்பவம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:திண்டுக்கல்லில் ஒரே நாளில் 3 கொலை - அச்சத்தில் பொதுமக்கள்

ABOUT THE AUTHOR

...view details