போரூர் அருகே மதனந்தபுரம் குறிஞ்சி தெருவில் வசித்து வந்தவர் பாஸ்கரன்(78). இவர், தனியார் நிறுவனத்தில் வேலை செய்து ஓய்வு பெற்றவர். தனது கீழ் வீட்டை வாடகைக்கு விட்டு மேல் வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் இன்று இவரது வீட்டில் இருந்து மிகுந்த துர்நாற்றம் வீசுவதாக, அக்கம்பக்கத்தினர் பாஸ்கரனின் மகனுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவரது மகன் மகேந்திரபிரபு வந்து பார்த்தபோது வீடு வெளிப்புறமாக பூட்டப்பட்டிருந்தது.
அழுகிய நிலையில் வீட்டில் இறந்து கிடந்த முதியவர் - போலீசார் விசாரணை - 78 year old men
சென்னை: போரூர் அருகே தனியாக வீட்டில் வசித்து வந்த முதியவர் ஒருவர் ம்ர்மமான முறையில் அழுகிய நிலையில் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்தச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, பாஸ்கரன் கழுத்து இறுக்கப்பட்டு அழுகிய நிலையில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த மாங்காடு காவல்துறையினர் இறந்து கிடந்த பாஸ்கரன் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
பாஸ்கரன் தனது மனைவி சுசிலாவை பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார். இவர் இறந்த நேரத்தில் காவலாளி மணி என்பவரையும் காணவில்லை. எனவே, அவர்தான் கொலை செய்து விட்டு 3 சவரன் நகை, மோட்டார் சைக்கிளை கொள்ளை அடித்து சென்றிருப்பார் என்ற கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர்.