தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாளை டாஸ்மாக் கடைகள் திறப்பு: மூழு வீச்சில் ஆயத்த பணிகள்! - டாஸ்மாக் கடைகள் திறப்பு எதிரொலி

சென்னை: டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதையடுத்து இரவோடு இரவாக தகுந்த விலகலை கடைபிடிக்க கட்டைகளால் தடுப்புகள் அமைக்கும் பணி பல்வேறு டாஸ்மாக் கடைகளில் நடைபெற்று வருகிறது.

poonamalle opening of Tasmac stores preparation
poonamalle opening of Tasmac stores preparation

By

Published : Aug 17, 2020, 10:32 PM IST

சென்னை பகுதியில் டாஸ்மாக் கடைகள் நாளை திறக்கப்படுவதாக நேற்று (ஆக.16) இரவு அறிவிப்பு வெளியானது.

இதனைத்தொடர்ந்து பூந்தமல்லி, மாங்காடு, குன்றத்தூர், திருவேற்காடு, நசரத்பேட்டை ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகளின் முன் பகுதியில் இரவோடு இரவாக டாஸ்மாக் கடைகளின் தகுந்த இடைவெளியை கடைபிடிக்க கட்டைகளால் தடுப்புகள் அமைக்கும் பணி பல்வேறு டாஸ்மாக் கடைகளில் செய்து முடிக்கப்பட்டுவிட்டது.

தற்போது மீதமுள்ள சில கடைகளில் தடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இன்று (ஆக.17) மாலைக்குள் அனைத்து கடைகளுக்கும் தேவையான மதுபானங்கள் வாகனங்கள் மூலம் கொண்டு வரப்படும் என ஊழியர்கள் தெரிவித்தனர். அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களில் இரவோடு இரவாக தடுப்புகள் அமைக்கும் பணி நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details