தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'என் உடலை சென்னையிலேயே அடக்கம் செய்யுங்கள்' - சிஆர்பிஎஃப் அலுவலர் தற்கொலை! - Latest Chennai News

சென்னை: 'என் உடலை சென்னையிலேயே அடக்கம் செய்யுங்கள்' என கடிதம் எழுதி வைத்து சிஆர்பிஎஃப் அலுவலர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

poonamalle-crpf-comandand-suicide
poonamalle-crpf-comandand-suicide

By

Published : Sep 8, 2020, 7:46 PM IST

பூந்தமல்லி அடுத்த கரையான்சாவடியில் மத்திய ரிசர்வ் படை 77ஆவது பெடாலியன் அமைந்துள்ளது. இங்கு துணை கமாண்டராக பணிபுரிந்து வந்தவர் ஸ்ரீஜன்(50). கேரளாவைச் சேர்ந்த அவர், பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

இந்நிலையில், இன்று (செப்டம்பர் 8) காலை வழக்கம்போல் பணிக்கு வந்த ஸ்ரீஜன், தனது அறைக்குச் சென்ற சிறிது நேரத்தில் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது. இதையடுத்து அங்கு பனியில் இருந்த காவலர்கள் உள்ளே சென்று பார்த்தபோது, ஸ்ரீஜன் தனது துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து கிடந்தார்.

அவரை மீட்டு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு காவலர்கள் அழைத்து சென்றனர். ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

சிஆர்பிஎஃப் அலுவலரின் கடிதம்

மேலும் அவரது அலுவலக அறையில் இருந்து ஒரு கடிதம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதில் ''தனது தற்கொலைக்கு யாரும் காரணமில்லை. சொந்த பிரச்னை காரணமாகவே தற்கொலை செய்தேன். எனது உடலை சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லாமல் சென்னையில் அடக்கம் செய்யவேண்டும்'' என உருக்கமாக எழுதப்பட்டுள்ளது.

இது குறித்து காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். துணை கமாண்டர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:திண்டிவனத்தில் பெண் கழுத்தறுத்து படுகொலை!

ABOUT THE AUTHOR

...view details