தஞ்சை பெருவுடையார் கோயிலில் வருகின்ற பிப்ரவரி 5ஆம் தமிழ், சமஸ்கிருதம் ஆகிய இரு மொழிகளிலும் குடமுழுக்கு நடைபெற இருக்கிறது. இந்நிலையில், நடிகர் பொன்வண்ணன் இது தொடர்பாக தனது முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என்ற போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் தலைவர் என். நாராயணன் எழுதிய இக்கடிதத்தை படிக்க நேர்ந்தது.
இதில் கையெழுத்திட்டுள்ள இவரைப்பற்றி ‘’Metoo‘’ செல்வி சின்மயி பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியபோதுதான் எனக்குத்தெரியும்... (அவர்தானே இவர்?)
ஆனால் அதற்கு பிறகு சின்மயி இவரைப்பற்றி எங்கேயும் எதுவும் சொல்லாமல் மறைத்துவிட்டதால் நானும் மறந்துவிட்டேன்!
சரி.... கடிதத்திற்கு வாறேன்!
இந்த அறிக்கையில் - ‘’எதிர் காலத்தில் ‘’தூயதமிழ் மொழியில்’’ கட்டப்படுகிற கோயில்களில் குடமுழுக்கு செய்திடமுடியும்....’’ என்ற திமிர் பேச்சுக்கு - தமிழ் உணர்வாளர்கள், ஆன்மிகவாதிகள், களத்திலும்-ஊடகத்திலுமாக பதில் கொடுத்து வருகின்றனர்.
அத்தோடு இதில் மூன்றாவதாக ‘’குறிப்பாக நாத்திகர்களும்,பகுத்தறிவுவாதிகளும் இவ் விஷயத்தில் தலையிட்டு கருத்து சொல்வதை வண்மையாக கண்டிக்கிறோம்’’- என குறிப்பிட்டு சொல்லப்பட்டிருக்கிறது.
இதனடிப்படையில் கடவுளை மறுத்தால் ‘’நாஸ்திகம்’’மறுப்பவர் ‘’பகுத்தறிவுவாதிகள்’’என்று குற்றம் சாட்டப்படுகிறது... இது உண்மையா..?
இதற்கு பெரியார் அவர்களின் குரல் வழியாகவே பதிலளிப்பது சரி என நினைக்கிறேன்.