சென்னை:கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆவின் நிறுவனத்தில் 100 கோடி ரூபாய்க்கும் மேல் முறைகேடு செய்ததாக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கம் குற்றஞ்சாட்டியது.
கடந்த மாதம் ஆவின் நிர்வாக இயக்குநராக இருந்த நந்தகோபால் மாற்றப்பட்டு, அவருக்குப் பதிலாக கந்தசாமி ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டார்.
கந்தசாமி ஐஏஎஸ் நடவடிக்கை
புதிய நிர்வாக இயக்குநராக கந்தசாமி ஐஏஎஸ் பொறுப்பேற்றதும் ஆவினை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
முதற்கட்டமாக ஆவினுக்கு ஆண்டுக்கு சுமார் 18 கோடி ரூபாய் வரை இழப்பை ஏற்படுத்தி வந்த C/F ஏஜென்ட் முறையை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும் பலகோடி ரூபாய் லஞ்சம் பெற்றுக் கொண்டு நடைபெற்ற பணி நியமனங்களை ரத்து செய்தும், அது தொடர்பான முறைகேடுகள் குறித்தும் விசாரணைக்கு உத்தரவிட்டார்.
பால் முகவர்கள் கோரிக்கை
ஆவினில் முன்னாள் பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் பினாமியாக செயல்பட்ட ரமேஷ்குமார் உள்ளிட்ட பொது மேலாளர்களை பணியிடை நீக்கம் செய்யாமல், விசாரணை நடத்தினால் உண்மை வெளிச்சத்திற்கு வராது என்று தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கம் கோரிக்கை வைத்தது.
பொது மேலாளர்கள் இடமாற்றம்