சென்னை: கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை தழுவி படமாக எடுக்கப்பட்ட பொன்னியின் செல்வன் பாகம் 1, கடந்த ஆண்டு வெளியானது. இந்த படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஷ்வர்யா ராய் ஆகியோர் நடித்திருந்தனர்.
இதனையடுத்து சினிமா ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பொன்னியின் செல்வன் பாகம் 2 திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. இதனை தமிழ்நாடு முழுவதும் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். சென்னையை பொறுத்தவரை புறநகர் பகுதிகளான குரோம்பேட்டை வெற்றி, தாம்பரம் வித்யா ஆகிய திரையரங்குகளில் முதல் காட்சி காலை 9 மணிக்கு திரையிடப்பட்டது.
சென்னை குரோம்பேட்டையில் உள்ள வெற்றி திரையரங்கில் ஏராளமான ரசிகர்கள் முதல் காட்சி பார்ப்பதற்காக வருகைத் தந்திருந்தனர். அங்கு செண்டை மேளம், பறை இசை என உற்சாகமாக மேளதாளங்களுடன் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.