தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கேரள பெண்கள் ஒன்றுகூடி பொங்கலா வழிபாடு! - கேரளா பெண்கள்

சென்னை : ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில் மாசி மாதத் திருவிழாவை முன்னிட்டு மீனம்பாக்கம் ஜெயின் கல்லூரியில் சென்னை வாழ் இந்து கேரளா பெண்கள் வழிபாடு செய்தனர்.

Pongal worshiped by Chennai living Kerala Hindu women
இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கேரள பெண்கள் ஒன்றுகூடி பொங்கல் வழிபாடு!

By

Published : Mar 9, 2020, 6:40 PM IST

பெண்களின் சபரிமலை என அழைக்கப்படும் கேரள மாநிலத்தின் திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் மாசி மாதத் திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் எட்டு நாட்கள் கொண்டாட்டம் நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா மார்ச் 2ஆம் தேதி முதல் மார்ச் 10ஆம் தேதி வரை நடைபெறும் பொங்கலா விழாவில் லட்சக்கணக்கான பெண்கள் கலந்துகொண்டனர்.

திருவனந்தபுரத்தில் நடைபெறும் இந்தப் பொங்லா வழிபாட்டில் கலந்துகொள்ள முடியாத கேரள பெண்கள், சென்னை மீனம்பாக்கம் அடுத்த ஜெயின் தனியார் கல்லூரி வளாகத்தில் ஒன்றுகூடி வழிபட்டனர்.

குடும்பத்தின் மேன்மைக்காகவும், நாட்டுநலனுக்காகவும், மாணவர்கள் கல்வியில் சிறப்பான தேர்ச்சி பெற வேண்டியும் சென்னையில் நான்காவது ஆண்டாக இந்த விழா நடைபெறுகிறது. அடுத்தாண்டு இதைவிட அதிக பெண்கள் கலந்துகொண்டு கின்னஸ் சாதனைக்கு முயற்சி செய்வோம் என சென்னை வாழ் இந்து கேரளா பெண்கள் தெரிவித்தனர்.

இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கேரள பெண்கள் ஒன்றுகூடி பொங்கல் வழிபாடு!

இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் ஒன்றுகூடி பொங்கல் வைத்து வழிபாடு செய்த இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் இல.கணேசன், ஆலந்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் தா.மோ.அன்பரசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க :சித்த மருத்துவப் பிரிவுக்கான புதிய வளாகம் பெரம்பலூரில் திறப்பு!

ABOUT THE AUTHOR

...view details