இந்த ஆண்டு குடும்ப அட்டைத்தாரர்களுக்குப் பொங்கல் பண்டிகையைக் கொண்டாட அரிசி, கரும்பு, சர்க்கரை, ரூ.1000 பரிசுத்தொகை வழங்கப்படும் என கள்ளக்குறிச்சி புதிய மாவட்ட தொடக்க விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
இதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு நேற்று வெளியிட்டது. அதில் 2 கோடியே 5 லட்சத்து 25 ஆயிரத்து 337 பேருக்குப் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படவுள்ளது. அதில் 1 கிலோ பச்சரிசிக்காக ரூ 54.32 கோடியும், 2 அடி நீள கரும்புத்துண்டுக்காக ரூ 29.26 கோடியும், 1 கிலோ சர்க்கரை வழங்க ரூ 92.65 கோடியும், 20 கிராம் முந்திரி வழங்க ரூ 78.02 கோடியும், அவற்றைக் கொண்டு செல்ல துணிப்பைக்காக ரூ 39.01 கோடியும், ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்குவதற்காக ரூ 1950 .59 கோடியும் இதர செலவினங்களுக்காக ரூ 2 கோடியும் என மொத்தம் ரூ. 2 ஆயிரத்து 245.85 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசு ஆணை பிறப்பித்துள்ளது.