தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரேஷன் துவரம் பருப்பில் முறைகேடா?.. மத்திய - மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு! - Pongal

பொங்கல் பரிசு தொகுப்பில் முறைகேடு செய்த தனியர் நிறுவனத்திடமே ரேஷன் கடைகளுக்கு துவரம் பருப்பு வழங்க ஆர்டர் கொடுத்த மத்திய அரசு நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

By

Published : Nov 12, 2022, 4:54 PM IST

சென்னை:தமிழக ரேஷன் கடைகளுக்கு 14 ஆயிரத்து 614 மெட்ரிக் டன் துவரம் பருப்பு சப்ளை செய்ய மத்திய அரசின் வேளான் விற்பனை கூட்டமைப்புடன் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் ஒப்பந்தம் போட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த ஆண்டு பொங்கல் தொகுப்பில் தரம் குறந்த பொருட்கள் வழங்கி முறைகேடு செய்ததாக கூறப்படும் கேந்திரிய பந்தர் நிறுவனத்திடமே, துவரம் பருப்பு வழங்குமாறு தேசிய வேளாண் விற்பனைக் கூட்டமைப்பு உள் ஓபந்தம் போட்டுள்ளது.

இதை எதிர்த்து ஸ்ரீ சாய்ராம் இம்பெக்ஸ் என்ற நிறுவனம், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது. மேலும் அந்த மனுவில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்துக்கு சப்ளை செய்த பருப்பை ஆய்வு செய்ய வழக்கறிஞர் ஆணையம் அமைக்க வேண்டும் என்றும், தமிழகம் முழுவதும் உள்ள கிட்டங்கிகளில் உள்ள பருப்பின் மாதிரிகளை சேகரித்து அரசு ஆய்வகங்களில் தரப் பரிசோதனை செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

மனுவை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், இரண்டு வாரங்களில் மத்திய - மாநில அரசுகள் பதிலளிக்குமாறு உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:ஊட்டியில் உலா வரும் கருஞ்சிறுத்தைகள் - சிசிடிவி காட்சிகள் வெளியீடு!

ABOUT THE AUTHOR

...view details