தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொங்கல் பரிசு திட்டத்தில் முறைகேடு வழக்கு...பதிலளிக்க கால அவகாசம் - Lok Ayukta system

பொங்கல் பரிசு திட்டத்தில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் மேலும் அவகாசம் வழங்கியுள்ளது.

பொங்கல் பரிசு திட்டத்தில்
பொங்கல் பரிசு திட்டத்தில்

By

Published : Aug 26, 2022, 7:21 AM IST

சென்னை : திருவள்ளூரை சேர்ந்த ஜெயகோபி தாக்கல் செய்துள்ள மனுவில், குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரத்து 296 கோடியே 88 லட்சம் ரூபாய் செலவில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டதில் பல்வேறு முறைகேடுகள் மற்றும் ஊழல் நடந்ததது மட்டுமல்லாமல், பொருட்கள் தரமற்றவையாக இருந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.

ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்காத முதலமைச்சர், முறையாக செயல்படாத அதிகாரிகளை தடுக்காத உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி, கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி ஆகியோருக்கு எதிராக லோக் ஆயுக்தா அமைப்பில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் தமிழக அரசு, லோக் ஆயுக்தா, அமைச்சர்கள் பதிலளிக்க உத்தரவிடப்பட்டு இருந்தது. இந்நிலையில் நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, எதிர்மனுதாரராக உள்ள அமைச்சர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியும் பதிலளிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து பதில்மனு தாக்கல் செய்ய மேலும் அவகாசம் வழங்கிய நீதிபதி வழக்கு விசாரணையை செப்டம்பர் 13ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க : கனல் கண்ணன் ஜாமின் மனு தள்ளுபடி... சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details