தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோகம்.. சென்னையில் ஸ்டாலின் தொங்கிவைக்கிறார்.. - பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்பு

தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்யப்பட உள்ளது. சென்னையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோகம்
பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோகம்

By

Published : Jan 9, 2023, 7:31 AM IST

சென்னை: தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு சார்பில், குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த பரிசுத் தொகுப்பானது இந்த பரிசுத் தொகுப்பானது ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு, ரூ.1000 ரொக்கம் ஆகியவை அடங்கியது. தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்யப்பட உள்ளது. சென்னையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அட்டைதாரர்களுக்கு வழங்கி தொடங்கி வைக்கிறார்.

2021ஆம் ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரூ.2,500 ரொக்கம் வழங்கப்பட்டது. ஆனால் 2022ஆம் ஆண்டில் ரொக்கம் வழங்கப்படவில்லை. மஞ்சள் பையுடன் கூடிய பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு, முழு கரும்பு அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.

இந்த பொருள்கள் தரமானதாக இல்லையென்று புகார்கள் எழுந்தன. இதனால், இந்தாண்டு ரூ.1,000 ரொக்கம் மட்டும் வழங்கப்படும் என்று அறிவிகப்பட்டது. இதனிடையே கரும்பு வழங்க வேண்டும் என்று விவசாய சங்கங்களும், எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தின. அதன்பின் முதலமைச்சர் ஸ்டான் ஆலோசனை நடத்தி, முழு கரும்பு வழங்கப்படும் என்று அறிவித்தார்.

பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கத்தை அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் உரிய முறையில் விநியோகம் செய்து முடிக்க வேண்டிய முழு பொறுப்பும் மாவட்ட ஆட்சியர்களுக்கு உரியது. பொங்கல் பரிசுத் தொகுப்பை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கிவைத்த பின், அனைத்து ரேஷன் கடைகளிலும் விநியோகம் தொடங்க வேண்டும். பொங்கல் பண்டிகைக்கு முன்னர் பரிசுத் தொகுப்பை வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் அரசு தரப்பில் மாவட்ட நிர்வாகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பொங்கலுக்காக முழு வீச்சில் மண்பானைகளை தயாரிப்பில் ஆவியூர் மக்கள்!

ABOUT THE AUTHOR

...view details