தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஜம்மு-காஷ்மீர் மாநில உரிமையை பறிக்கும் செயலை ஏற்க முடியாது: நாராயணசாமி - நாராயணசாமி

சென்னை: ஜம்மு-காஷ்மீர் மாநில உரிமையை பறிக்கும் செயலை ஏற்க முடியாது என, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.

narayanasamy

By

Published : Aug 6, 2019, 2:03 PM IST

இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், "டெல்லி, புதுச்சேரி உள்ளிட்டவை சட்டப்பேரவை கொண்ட யூனியன் பிரதேசமாக இருக்கும் நிலையில், நாங்கள் மாநில உரிமை கேட்டு வருகிறோம். ஆனால் மாநில அந்தஸ்தில் உள்ள காஷ்மீரை இரண்டாக பிரித்து யூனியன் பிரதேசமாக மாற்றியது அம்மக்களுக்கு எதிரானது.

அதுமட்டுமின்றி 370 சட்டத்தால் காஷ்மீரில் வாழும் பண்டித்துகள், பழங்குடியினர், சிறுபான்மையினர் பாதுகாப்பாக இருந்தனர். அதிகாரமிக்க மாநிலத்தில் அதிகாரத்தை குறைத்தால் எப்படி அம்மாநிலம் நிர்வாகத்தை நடத்த முடியும்? ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு கொடுக்கப்பட்ட உரிமையை பறிக்கும் செயலை ஏற்க முடியாது. அம்மாநிலத்தை தனியாக பிரிப்பதன் மூலம் பயங்கரவாதம் குறையுமா என்று தெரியவில்லை. இதனால் அந்த பகுதியில் உள்ள அமைதி சீர்குலையும்.

ஜம்மு காஷ்மீர் மாநில உரிமையை பறிக்கும் செயல் ஏற்க முடியாது

இதுபோன்று மற்ற மாநிலங்களையும் இரண்டாக பிரிக்கும் நடவடிக்கைகளை மோடி, அமித்ஷா ஆகியோர் எடுப்பார்கள். ஜம்மு-காஷ்மீரில் தற்போது தேவையானது வேலை வாய்ப்பு, தொழிற்சாலை, விவசாய வளர்ச்சி ஆகியவை தான். அதுமட்டுமின்றி ஒரே நாடு, ஒரே கலாச்சாரம் என்பதை மக்கள் ஏற்று கொள்ளமாட்டார்கள். பெருமான்மை இருக்கும் ஒரே காரணத்தால் மத்திய அரசு அனைத்தையும் குழித்தோண்டி புதைக்கக் கூடாது" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details