புதுச்சேரியில் மாநில இயற்கை பேரிடர் மேலாண்மை ஆணைய கூட்டம் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அனைத்துத்துறை அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர், அரசுத் துறை செயலாளர்கள், காவல் துறை அலுவலர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
அனுமதி:
இந்தக் கூட்டத்தில், கரோனா கட்டுப்படுத்துவது குறித்தும் பண்டிகை காலங்களை மக்கள் கொண்டாடுவதற்கான அனுமதி குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இதையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி, “கரோனா பரவல் குறித்தும், அதனை கட்டுப்படுத்துவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.
முதற்கட்டமாக யாருக்குத் தடுப்பூசி போடுவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. நிவர் புயல், புரெவி புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பேரிடர் நிதியிலிருந்து நிவாரண நிதி வழங்க ஆலோசனை செய்யப்பட்டது.