தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'மீனவர்களைப் பாதிக்கும் திட்டங்களைச் செயல்படுத்தியவர் பொன் ராதாகிருஷ்ணன்'

கன்னியாகுமரி: மத்திய இணை அமைச்சராக பொன் ராதாகிருஷ்ணன் பதவியில் இருந்தபோது மீனவர்கள் மற்றும் வியாபாரிகளை பாதிக்கும் திட்டங்களைச் செயல்படுத்திவிட்டு தேர்தல் வருவதால் இப்போது மக்களை திசை திருப்புகிறார் என காங்கிரசை சேர்ந்த விஜய் வசந்த் குற்றம் சாட்டியுள்ளார்.

மீனவர்களை பாதிக்கும் திட்டங்களை செயல்படுத்தியவர் பொன் ராதாகிருஷ்ணன் - விஜய் வசந்த் குற்றச்சாட்டு
மீனவர்களை பாதிக்கும் திட்டங்களை செயல்படுத்தியவர் பொன் ராதாகிருஷ்ணன் - விஜய் வசந்த் குற்றச்சாட்டு

By

Published : Dec 26, 2020, 2:19 PM IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர் விஜய் வசந்த் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர், "தமிழ்நாடு அரசு பொங்கலுக்கு 2 ஆயிரத்து 500 ரூபாய் வழங்குவது என்பது சாதாரணமானது. அதனை விமர்சிப்பவர்கள் தமிழ்நாட்டைப் பற்றி தெரியாதவர்களாகத்தான் இருக்க முடியும். அரசியலுக்காக இதனை குறை கூறுவது சரியல்ல.

மத்திய அரசைப் பொறுத்தவரை விவசாயிகள் சாலையிலும் வியாபாரிகள் ஜிஎஸ்டி வரியால் தெருவிலும் போராடிவருகின்றனர்.

அதிலும் விவசாயிகளின் நிலை மிகவும் பரிதாபகரமானது. டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த விவசாயிகளில் பலர் உயிரிழந்துள்ளனர். ஆனால் மத்திய அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுடன் கைக்கோத்து ஒப்பந்தங்களை போட்டு பணம் கை மாற்றியுள்ளது.

முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், தான் பதவியில் இருந்தபோது பொதுமக்களுக்கு விரோதமான திட்டங்களைக் கொண்டுவந்துவிட்டு இப்போது மக்களை திசை திருப்புவதற்காக நான் இருந்தால் அதைச் செய்வேன், இதைச் செய்வேன் என்று கூறுகிறார்.

மத்திய இணை அமைச்சராக அவர் இருந்தபோது அவருக்கு கொடுத்த வாய்ப்பை பயன்படுத்தாமல் இப்போது இடைத்தேர்தலை கணக்கில் வைத்து அவர் பேசுகிறார்" என்றார்.

இதையும் படிங்க: குமரியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்!

ABOUT THE AUTHOR

...view details