தமிழ்நாடு

tamil nadu

நீதிமன்றத்தில் வழக்கு நிலுவை... ஆவணங்களை சமர்ப்பிக்க முடியாது! - அரசுக்கு பொன் மாணிக்கவேல் கடிதம்!

சென்னை: நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் ஆவணங்களைச் சமர்ப்பிக்க முடியாது என்று சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

By

Published : Nov 30, 2019, 6:19 PM IST

Published : Nov 30, 2019, 6:19 PM IST

பொன் மாணிக்கவேல்
பொன் மாணிக்கவேல்

சிலைகடத்தல் சிறப்பு அதிகாரியாக செயல்பட்ட பொன்.மாணிக்கவேலின் ஒரு வருட பதவிக்காலம் இன்றுடன் முடிவடைந்தது. இதனால் தமிழக அரசு இன்று இதுவரையில் உள்ள சிலை கடத்தல் தொடர்பான ஆவணங்களை, காவல் துறை கூடுதல் இயக்குநரிடம் ஒப்படைக்குமாறு தமிழக அரசு அரசாணை அனுப்பியது.

இதற்கு பதிலளித்த பொன். மாணிக்கவேல், தன்னை சிறப்பு அதிகாரியாக நியமித்தது சென்னை உயர் நீதிமன்றம் எனவும், சிலை கடத்தல் விசாரணை தொடர்பான அனைத்து ஆவணங்களையும் முறையாக உயர் நீதிமன்றத்தில் சமர்பித்து வருவதாகவும் கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார்.

மேலும், அந்த கடிதத்தில் இந்த வழக்கு தொடர்பான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெறுவதாகவும், வருகிற 2ஆம் தேதி அறிவிப்பு வெளியாகும் வரையில் எந்த விதமான ஆவணங்களையும் சமர்ப்பிக்க முடியாது எனவும் தமிழ்நாடு காவல் துறை இயக்குநர், உள்துறைச் செயலர் நிரஞ்சன் மார்டி ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதையும் படிங்க: ஆவணங்களை ஒப்படைக்க பொன். மாணிக்கவேலுக்கு அரசு உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details