தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கை: விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு - polytechnic students admission

பாலிடெக்னிக் படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பப் பதிவு ஜூலை 19ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

polytechnic
polytechnic

By

Published : Jul 12, 2021, 6:06 PM IST

சென்னை: தமிழ்நாட்டிலுள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு, பகுதி நேரம், இரண்டாம் ஆண்டில் மாணவர்கள் சேர்வதற்கு ஜூன் 25ஆம் தேதிமுதல் https://tngptc.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பப் பதிவு நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில், இன்றுடன் (ஜூலை 12) முடிவடைய இருந்த விண்ணப்பப் பதிவுக்கான கால அவகாசத்தை 19ஆம் தேதிவரை நீட்டிக்கப்படுவதாக தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

2020-21ஆம் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மட்டும் ஒன்பதாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடத்தப்படும். பிற மாணவர்களுக்கு 10ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடத்தப்படும்.

தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் நேரடி கட்டுப்பாட்டில் 51 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் செயல்படுகின்றன.

தமிழ்நாட்டில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் உள்ள 18 ஆயிரத்து 120 இடங்களில் மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். மாணவர்கள் விண்ணப்பம் செய்வதற்கான வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டுள்ளன.

10ஆம் வகுப்பில் 2021ஆம் ஆண்டு தேர்ச்சிபெற்ற மாணவர்கள் மதிப்பெண் இல்லாமலேயே முதலாமாண்டு பலவகை தொழில்நுட்ப படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details