தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு நுழைவுச்சீட்டு பதிவிறக்கம்! - chennai latest news

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வுக்கான நுழைவுச்சீட்டினை நாளை முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு நுழைவுச்சீட்டு பதிவிறக்கம்!
பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு நுழைவுச்சீட்டு பதிவிறக்கம்!

By

Published : Oct 21, 2021, 10:51 PM IST

சென்னை: பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வுக்கான நுழைவுச்சீட்டினை நாளை (அக்.21) முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

ஆன்லைன் மூலம் நடைபெறும் தேர்விற்குப் பயிற்சி தேர்வினையும் மேற்கொள்ளலாம் எனக் கூறியுள்ளது.

இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் லதா அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில், '2017-18ஆம் ஆண்டிற்கான அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வுகள் வருகின்ற அக்டோபர் 28 முதல் 31ஆம் தேதி வரையிலும், காலை மற்றும் மாலை நேரத்திலும் நடைபெறவுள்ளது.

தேர்வு நுழைவுச் சீட்டு பதிவிறக்கம்

இதற்கான தேர்வு நுழைவுச் சீட்டு www.trb.tn.nic என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதனை பயனர் பெயர், கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவிட்டு, வருகின்ற 22ஆம் தேதி முதல் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தேர்வு மைய நுழைவுச் சீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ள நேரத்துக்கு, நுழைவுச் சீட்டின் பிரதியுடன் தேர்வர்கள் செல்ல வேண்டும். மேலும் ஏதேனும் ஒரு அசல் அடையாள அட்டையுடன், விண்ணப்பிக்கும்போது பதிவேற்றம் செய்த புகைப்படத்தின் அசல் பிரதியும் தவறாமல் எடுத்து வர வேண்டும்.

காலை தேர்வுக்கு 7.30, பிற்பகல் தேர்வுக்கு 12.30 மணிக்குள்ளாகவும் தேர்வு மையத்திற்குள் இருக்க வேண்டும். தாமதமாக வரும் விண்ணப்பதாரர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

இணையதளத்தில் பயிற்சி வினாக்கள்

கணினி மூலம் நடைபெறும் தேர்விற்கு, ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பயிற்சி மேற்கொள்ளலாம். இந்தப் பயிற்சி வினாக்கள் முற்றிலும் பயிற்சிக்காக மட்டுமே.

மேலும் நுழைவுச்சீட்டில் நகரம் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்விற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் மீண்டும் ஒரு முறை தேர்வு மையத்தை குறிப்பிட்டு நுழைவுச்சீட்டு வெளியிடப்படும். தேர்வர்கள் அதனையும் கண்டிப்பாக பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்'' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:அறிவியலை பிராந்திய மொழிகளில் வளர்க்க நடந்த ஒரு நாள் பயிற்சிப்பட்டறை!

ABOUT THE AUTHOR

...view details