தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அகில இந்திய மருத்துவ சங்க உறுப்பினர்களுடன் அமைச்சர் கலந்தாய்வு!

சென்னை: தமிழ்நாடு மாசு கட்டுபாட்டு வாரிய அலுவலகத்தில் அகில இந்திய மருத்துவ சங்க உறுப்பினர்களுடன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் ஆலோசனை நடத்தினார்.

counceiling

By

Published : Jun 26, 2019, 9:11 PM IST

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் அகில இந்திய மருத்துவ சங்க உறுப்பினர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கலந்தாய்வில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கேசி கருப்பண்ணன், முதன்மைச் செயலாளர், வனத்துறை, பொது மருத்துவ கழிவுகள் சுத்திகரிப்பு நிலைய அமைப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கலந்தாய்வின் போது வழங்கப்பட்ட ஆலோசனைகள் கீழ் வருமாறு,

  • மருத்துவ கழிவுகளை உரிய நேரத்தில் சேகரித்து மருத்துவக் கழிவு மேலாண்மை விதிகளின்படி சுற்றுச்சூழலுக்கு உகந்த வண்ணம் சுத்திகரிப்பு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
  • மருத்துவ கழிவுகளை சேகரிக்கும் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவிகளை பொருத்தி கண்காணிக்குமாறு பொது மருத்துவக் கழிவு மேலாண்மை அமைப்பாளர்களுக்கு கூறப்படுகிறது.
  • மருத்துவ கழிவுகளை சுத்திகரிப்பதற்காக பொது மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு நிறுவனங்கள் விதிக்கப்படும் கட்டண விதிகளை பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.
  • மருத்துவக் கழிவு மேலாண்மை விதிகளின்படி தெளிப்பானில் எரிவாயுவை தக்க வைக்கும் நேரம் குறைந்தபட்சம் இரண்டு வினாடிகளுக்குள் இருக்குமாறு அறிவிக்கப்பட்டது.
  • தேசிய பசுமை தீர்ப்பாயம் ஆணை படி அனைத்து மருத்துவமனைகளிலும் தமிழ்நாடு கட்டுப்பாட்டு வாரியத்திடம், இசை வாணியும் மருத்துவ கழிவுகளை கையாளுவதற்கான அங்கீகாரம் பெறுவதற்கு அழைக்கப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details