தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழகத்தில் 11 மணி நிலவரப்படி 30.62 சதவீதம் வாக்குப்பதிவு! - தமிழகத்தில் பகல் 11 மணி நிலவரப்படி மக்களவைத் தேர்தலில் 30.62 சதவீதம் வாக்குகள் பதிவு

தமிழகத்தில் பகல் 11 மணி நிலவரப்படி மக்களவைத் தேர்தலில் 30.62 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில்

By

Published : Apr 18, 2019, 12:05 PM IST

Updated : Apr 18, 2019, 12:25 PM IST

தமிழ்நாட்டில் 38 தொகுதிகளுக்கான மக்களவைத் தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியது முதலே மக்கள் விறுவிறுப்பாக வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.

இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாஹூ, பகல் 11 மணி நிலவரப்படி 30.62 சதீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக ஆரணி தொகுதியில் 36.51 சதவீதமும், குறைந்த பட்சமாக மத்திய சென்னையில் 22.8 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது. முக்கிய தொகுதிகளான மதுரையில் 25.41 சதவீதமும், தென் சென்னை பகுதியில் 23.81 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளது.

மேலும் புதுச்சேரி மக்களவைத் தேர்தலில் 22.7 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்தார்.

மொத்தமாக தமிழகத்தில் பகல் 11 மணி நிலவரப்படி மக்களவைத் தேர்தலில் 30.62 சதவீத வாக்குகள் போடப்பட்டுள்ளன. இதுவரை 305 வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோளாறு காரணமாக மாற்றப்பட்டுள்ளன எனத் தெரிவித்தார்.

Last Updated : Apr 18, 2019, 12:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details