வாக்கு சாவடி மையம்: காலை சிற்றுண்டிக்கு முண்டியடித்த முகவர்கள்! - ராணி மேரி கல்லூரி
சென்னை: ராணி மேரி கல்லூரியில் அமைக்கப்பட்ட வாக்கு சாவடி மையத்திற்கு வருகை தந்த முகவர்களுக்கு காலை சிற்றுண்டி கிடைக்காததால் முண்டியடித்துக்கொண்டு உணவினை வாங்கும் அவல நிலை ஏற்பட்டது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.
சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடும் அலுவலர்கள், முகவர்களுக்கு காலை சிற்றுண்டி, மதிய உணவு, தேநீர் உள்ளிட்டவை வழங்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்நிலையில், சென்னை ராணிமேரி கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வருகை புரிந்த முகவர்களுக்கு காலை சிற்றுண்டி தரப்படவில்லை. மேலும் காலதாமதமாக மாநகராட்சி ஊழியர்கள் காலை சிற்றுண்டி வழங்க வந்ததால் முகவர்கள் முண்டியடித்துக்கொண்டு காலை சிற்றுண்டியை அலைந்து திரிந்து வாங்கும் நிலை ஏற்பட்டது.