தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு - சென்னை தேர்தல் அலுவலர் பிரகாஷ் - சென்னை ஆணையாளர் பிரகாஷ்

சென்னை: வாக்குச்சாவடிகளில் பணிபுரியவுள்ள அலுவலர்களுக்கான முதற்கட்ட தேர்தல் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளத் தவறிய அலுவலர்கள் 21.03.2021 அன்று நடைபெற உள்ள பயிற்சி வகுப்பில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என சென்னை மாவட்டத் தேர்தல் அலுவலர் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

polling booths of 16 assembly constituencies in Chennai district
polling booths of 16 assembly constituencies in Chennai district

By

Published : Mar 19, 2021, 9:30 PM IST

தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத்தேர்தல் 2021 தொடர்பாக சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 5 ஆயிரத்து 911 வாக்குச்சாவடிகளில் பணியாற்றவுள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான (Polling Personnel) முதற்கட்ட பயிற்சி வகுப்புகள் சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களால் கடந்த 13.03.2021 (சனிக்கிழமை) அன்று அந்தந்த சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட இடங்களில் நடைபெற்றது.

இந்த முதற்கட்ட தேர்தல் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளத் தவறிய வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951யின்படி விளக்கம் கேட்கும் குறிப்பாணை (Show Cause Notice) சம்பந்தப்பட்ட துறையின் வாயிலாக செய்யப்பட்டுள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள், தீவிர நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் இருக்கும் பணியாளர்கள் தவிர, வேறு எவருக்கும் தேர்தல் பணியிலிருந்து விலக்கு அளிக்கப்படக்கூடாது.

இந்நிலையில், முதற்கட்டத்தேர்தல் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளத் தவறிய வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு வருகின்ற 21.03.2021 (ஞாயிற்றுக் கிழமை) அன்று, மீண்டும் பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளது.

இதில்,கலந்து கொள்ளத்தவறும் அனைத்து வாக்குச்சாவடி அலுவலர்கள் மீதும் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் மக்கள் பிரதி நிதித்துவச் சட்டம், 1951 பிரிவு 134, இந்திய தண்டனைச் சட்டத்தின்படி பணிநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்டத் தேர்தல் அலுவலர் மற்றும் சென்னை ஆணையாளர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:

தேவர் சிலையை சேதப்படுத்திய விவகாரம்: அரசைக் கண்டித்து கறுப்புக்கொடி கட்டி எதிர்ப்பு!

ABOUT THE AUTHOR

...view details