கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில் நாடு முழுவதும் மே 17ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டுள்ள கிராம மக்களின் வாழ்வாதாரத்தை உறுதிசெய்யும் வகையில் மக்கள் நீதி மையம் கட்சி நிர்வாகிகள் பொது மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவுறுத்தியுள்ளார்.
இதனையடுத்து பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள கிராமங்களில் அக்கட்சியினர் நிவாரணங்களை வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில துணைத் தலைவர் மகேந்திரன் தலைமையில் பொள்ளாச்சி அருகே உள்ள அர்த்தநாரிபாளையம், கோபாலபுரம், வடக்கிபாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வசிக்கும் ஏழை எளிய மக்களுக்கு வருவாய்த் துறையினர் அறிவுறுத்தலின்படி பயனாளிகளை தேர்வு செய்து ஆயிரம் குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருட்களை வழங்கினார்.
அத்தியாவசிய பொருள்கள் வழங்கிய மக்கள் நீதி மய்யம் கட்சியினர்! பின்பு பேசிய அவர், ஊராட்சி தேர்தல் முடிந்த பிறகு கிராமங்களில் பொதுமக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக கிராம சபை கூட்டம் நடைபெறவில்லை, மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் தமிழ்நாட்டில் மாவட்டச் செயலாளர்கள் மூலமாக கிராமங்களில் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கிவருவதாக தெரிவித்தார்.
இதையும் பார்க்க: சுட்டெரிக்கும் வெயில்... தவிக்கும் சங்குவளை நாரைகள்: பாலைவனமான பறவைகள் உய்விடம்!