தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொள்ளாச்சி விவகாரத்தில் ஜாமின் கோரிய மனு தள்ளுபடி! - முன் ஜாமின் கோரி வழக்கு

கோவை: பொள்ளாச்சியில் மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்து, வீடியோ எடுத்து மிரட்டிய வழக்கில் முன் ஜாமின் கோரி மணிவண்ணன் என்பவர் தாக்குதல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

பொள்ளாச்சி வழக்கு தள்ளுபடி

By

Published : Mar 18, 2019, 5:30 PM IST

Updated : Mar 18, 2019, 5:36 PM IST

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் சமூக வலைதளங்கள் மூலம் மாணவிகளிடம் நண்பர்களாக பழகி காதலிப்பதாகக் கூறி பாலியல் பலாத்காரம் செய்து, வீடியோ எடுத்து பணம் பறித்ததாக சபரிராஜன், திருநாவுக்கரசு, சதீஷ்குமார் மற்றும் வசந்தகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இதற்கிடையில் இந்த விவகாரம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்த மாணவியின் சகோதரருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக செந்தில், பாபு, வசந்தகுமார் , ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த கொலை மிரட்டல் வழக்கில் மணிவண்ணன் என்பவர் தனக்கு முன் ஜாமின் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இதனிடையே, மணிவண்ணனுக்கு ஜாமின் வழங்க கூடாது என திராவிடர் விடுதலை கழகத்தை சேர்ந்த வினோதினி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த இரு வழக்குகளும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், முன்ஜாமின் கோரிய வழக்கை வாபஸ் பெறுவதாக தெரிவித்தார். இதையடுத்து வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

Last Updated : Mar 18, 2019, 5:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details