தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரஜினிகாந்த் பிறந்தநாள் - அரசியல் தலைவர்கள் வாழ்த்து மழை! - happy birthday rajinikanth

நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

politicians-wishes-rajinikanth-on-his-birthday
politicians-wishes-rajinikanth-on-his-birthday

By

Published : Dec 12, 2021, 11:31 AM IST

நடிகர் ரஜினிகாந்த் இன்று (டிச.12) தனது 71ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு அரசியல் தலைவர்கள் பலர் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதன்படி, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், “இன்று பிறந்தநாள் கொண்டாடும் தாதாசாகெப் பால்கே, சூப்பர் ஸ்டார் ஸ்ரீ.ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

அவர் நல்ல ஆரோக்கியத்துடன் சீரும் சிறப்புமாக வாழ நான் அந்த இறைவனை வேண்டிக்கொள்கிறேன். மகாவதார் பாபாஜியின் கருணையும் அருளும் என்றும் கிடைக்கட்டும்!”

முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி தனது ட்விட்டர் பக்கத்தில், ”அன்பு நண்பர் திரு.ரஜினிகாந்த் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!

தாங்கள் நல்ல ஆரோக்கியத்தோடும், பரிபூரண உடல்நலத்தோடும் நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்”எனப் பதிவிட்டுள்ளார்.

மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில், ”இன்று பிறந்தநாள் காணும் தாதாசாகேப் பால்கே விருது பெற்ற நடிகர் திரு.ரஜினிகாந்த் அவர்களுக்கு இனிய நல்வாழ்த்துகள்”எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : ’உள்ளார்ந்த அன்புடன் பழகிடும் இனிய நண்பர் சூப்பர் ஸ்டார்’ - முதலமைச்சர் ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details