பிரபல எழுத்தாளர் கி.ரா என அழைக்கப்படும் கி.ராஜநாராயணன் (99), வயது மூப்பால் நேற்றிரவு 11 மணியளவில், புதுச்சேரியில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். லாஸ்பேட்டை அரசுக் குடியிருப்பில் அஞ்சலிக்கு வைக்கப்படும் இவரின் உடல், இன்று (மே.18) மாலை கருவடிக்குப்பம் சுடுகாட்டிற்கு ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்படுகிறது. அவரது மறைவுக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உட்பட பலர் இரங்கல் தெரிவி்த்து வருகின்றனர்.
கனிமொழி எம்.பி இரங்கல்:
மநீம தலைவர் கமல்ஹாசன் இரங்கல்:
மநீம தலைவர் கமல்ஹாசன் இரங்கல் விசிக தலைவர் திருமாவளவன் இரங்கல்
விசிக தலைவர் திருமாவளவன் இரங்கல் தெலங்கானா ஆளுநர் தமிழிசை இரங்கல்
எழுத்தாளர் முருகானந்தம் ராமசாமி இரங்கல்:
நவீனத்துவத்தின் பரிதவிப்பை மேவாயின் ஓரத்தில் வெளிப்படும் எளிய புன்னகையால் கடந்து சென்ற கலைக்கு தமிழில் கி.ராஜநாராயணன் என்று பெயர்..! எம்மொழியின் பெருங்கலைஞனுக்கு இறுதி வணக்கம்..! எனத் தெரிவித்துள்ளார்.
எழுத்தாளர் சோ தர்மன் இரங்கல்:
"கரிசல் இலக்கியத்தில் உங்களுக்கான நாற்காலி போட்டாச்சு. நீங்கள் ஜம்மென்று உட்கார்ந்து கால்மேல் கால் போட்டுக் கொள்ளலாம். நாங்கள் எல்லாம் இனிமேல் பேனாவை யோசித்துத்தான் பிடிக்க வேண்டும்" போய் வாருங்கள் அப்பா. நாங்கள் உங்கள் பிள்ளைகள்.உங்கள் பேர் சொல்லுவோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.