தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆறுமுகசாமி விசாரணை ஏன்? பகீர் கிளப்பிய அப்போலோ! - chennai

சென்னை: அரசியல் காரணங்களுக்காகவே, ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்துவதாக அப்போலா வழக்குரைஞர் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதையடுத்து, நீதிபதிகள் வழக்கை தேதி குறிப்பிடமால் ஒத்திவைத்தனர்.

Chennai HC

By

Published : Mar 12, 2019, 2:47 PM IST

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை செய்துவரும், தனிநபர் ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டும். மருத்துவர்கள் குழுவை நியமித்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் அப்போலோ மருத்துவமனை தரப்பில் வழக்குத் தொடர்ந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அப்போலோ சார்பில் ஆஜரான வழக்குரைஞர் பி.எஸ்.ராமன், ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிறப்பான சிகிச்சை அளித்ததாக தமிழக அரசு முதலில் தெரிவித்தது.

பின்னர், அரசியல் காரணங்களுக்காகவே ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தை தமிழக அரசு நியமித்துள்ளது. ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படவில்லை என்றால், மருத்துவமனை கோரிக்கையை ஏற்க மறுப்பது ஏன்? என கேள்வி எழுப்பினார்.

அப்போது குறுக்கிட்ட ஆணைய வழக்குரைஞர் ஏ.ஆர்.எல். சுந்தரேசன், மருத்துவமனையின் கோரிக்கையை ஏற்பதும், மறுப்பதும் ஆணையத்தின் தனிப்பட்ட முடிவு. ஆணையத்திற்கு அந்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

பின்னர், தனது வாதத்தைத் தொடர்ந்த அப்போலோ வழக்குரைஞர், அப்போலோ ஆவணங்களை சரிபார்க்க நான்கு மருத்துவர்கள் கொண்ட குழுவை ஆணையம் ஏன் ரகசியமாக நியமித்தது? என கேள்வி எழுப்பினார்.

அப்போது சசிகலா தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் அரவிந்தன், ஆணையத்தின் 147 சாட்சிகளில் 103 சாட்சிகளிடம் சசிகலா தரப்பில் குறுக்கு விசாரணை முடிந்துள்ளது. 32 சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடத்தப்பட உள்ளது.

மேலும், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், இருதய சிகிச்சை மருத்துவர் ரிச்சர்டு பீலே, மருத்துவர் குருமூர்த்தி ஆகியோரிடம் குறுக்கு விசாரணை செய்ய ஆணையத்திடம் அனுமதி கேட்டுள்ளதாக தெரிவித்தார்

இதையடுத்து, வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details