தமிழ்நாடு முழுவதும் இன்று போலியோ நோய் தடுப்புக்கான போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இதில் சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் மட்டும் காலை 7 மணிமுதல் மாலை 5 மணிவரை நடைபெற்ற சொட்டு மருந்து முகாமில் 93.5 விழுக்காடு குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டுள்ளது.
அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், மாநகராட்சி மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் எனப் பல்வேறு பகுதிகளில் வழங்கப்பட்ட சொட்டு மருந்தால் சுமார் ஆறு லட்சத்து 98 ஆயிரத்து 347 குழந்தைகள் பயனடைந்துள்ளனர்.