தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

போதையில் தாறுமாறாக கார் ஓட்டிய காவலரால் நேர்ந்த துயரம்! - old man died in accident at chennai

விருகம்பாக்கம் அருகே குடிபோதையில் தாறுமாறாக காவலர் ஒருவர் கார் ஓட்டிச் சென்று முதியவர் மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

காவலர்
காவலர்

By

Published : Dec 27, 2021, 11:48 AM IST

சென்னை: விருகம்பாக்கம் ஏரிக்கரை பகுதியில் நேற்று (டிசம்பர் 26) காலை கார் ஒன்று அதிவேகமாகச் சென்றது. சாலையோரம் அமர்ந்திருந்த முதியவர் மீது மோதி விபத்துக்குள்ளானதில் அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் காரை மடக்கி காரிலிருந்த நபரைத் தாக்கியுள்ளனர். இது குறித்து விருகம்பாக்கம் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவலர்கள், பொதுமக்களிடமிருந்து அந்நபரை மீட்டு காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

விபத்து ஏற்படுத்திய நபர் காவல் துறையில் பணியாற்றும் ரஞ்சித் எனத் தெரியவந்தது. அத்துடன் அதிக மதுபோதையில் காரை தாறுமாறாக ஓட்டி விபத்து ஏற்படுத்தியது அம்பலமானது.

இது குறித்து வழக்குப்பதிவு செய்து விருகம்பாக்கம் காவலர்கள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க:கார் ஓட்டும்போது மாரடைப்பு - உயிரிழந்த ஓட்டுநர்

ABOUT THE AUTHOR

...view details