சென்னை செம்பியம் காவலர் குடியிருப்பில் வசித்து வந்தவர், ஜோசப் (37). இவர் புது வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் குற்றப்பிரிவில் காவலராகப் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு ஜெகதீஷ்வரி என்ற மனைவியும் ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
இந்நிலையில் ஜோசப் பணியிலிருந்தபோது உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால், கடந்த மே மாதத்திலிருந்து மருத்துவ விடுப்பில் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு ஜோசப் மற்றும் ஜெகதீஷ்வரிக்கு இடையே பிரச்னை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து ஜெகதீஷ்வரி தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றதாகவும் தெரிகிறது.