தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விரக்தியடைந்த காவல் ஆய்வாளர் எடுத்த அதிரடி முடிவு - madhavaram

சென்னை: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கையால் விருதுபெற்ற காவல் ஆய்வாளர், அரசு தன்னை அவமதிப்பதாகக்கூறி பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக தெரிவித்தது காவல் துறையினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காவல் ஆய்வாளர் ஜவகர்

By

Published : Apr 25, 2019, 2:39 PM IST

சென்னை மாதவரத்தில் காவல் ஆய்வாளராக பணிபுரிபவர் ஜவகர். இவர் வீரப்பனைப் பிடிப்பதற்காக அமைக்கப்பட்ட தனிப்படையில் இடம்பெற்று சிறப்பாக பணியாற்றினார். இதற்காக 2004ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் விருதும், பதவி உயர்வும் ஆய்வாளர் ஜவகருக்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில், இதனை எதிர்த்து மற்றொரு தரப்பினர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், விருது வழங்குவது தொடர்பாக தமிழ்நாடு அரசு பரிசீலித்து முடிவெடுக்கலாம் என்று உத்தரவிட்டது.

உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பின்பும் இது குறித்து அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது ஜவகர் உள்ளிட்ட பலரையும் அதிருப்தியடைய வைத்துள்ளது. இது குறித்து தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் அரசு தரப்பிலும் முறையிட முயன்றும் அவர்களது முறையீட்டை யாரும் கண்டுகொள்ளவில்லை என தெரிகிறது.

அரசின் முடிவு என்பது எப்போதும் ஒன்றாகவே இருக்கும் அப்படியிருக்கையில் அப்போது அங்கீகரித்து விருது கொடுத்த அரசு, தற்போது, எங்களை அங்கீகரிக்க மறுப்பது ஏன்? என்று விருது பெற்ற காவலர்கள் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து அரசு தங்களை அவமானப்படுத்துவதாகக் கூறியுள்ள ஆய்வாளர் ஜவகர், தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாகவும் அரசு கொடுத்த பதவி உயர்வு, விருது, ரொக்கப்பணம் மற்றும் வீட்டுமனை ஆகிய அனைத்தையும் முதலமைச்சரிடம் ஒப்படைக்கவுள்ளதாகவும் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். காவல் ஆய்வாளரின் இந்த பதிவு காவல் துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காவல் ஆய்வாளர் ஜவகர்

ABOUT THE AUTHOR

...view details