சென்னை புதுப்பேட்டை அருகேயுள்ள நரியங்காடு காவலர் குடியிருப்பில் வசிப்பவர், கிருஷ்ணமூர்த்தி. இவர் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருகின்றார். இவருக்கு கவிதா(40) என்ற மனைவியும் பரத், அஸ்வின் என இரு மகன்களும் உள்ளனர்.
இவரது மகன்கள் இருவரும் சொந்த ஊரில் வசித்து வருகின்றனர். காவலர் குடியிருப்பில் கிருஷ்ணமூர்த்தியும் அவரது மனைவியும் தனித்தனியாக வசித்து வருகின்றனர். மனைவி கவிதா சற்று மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றார். இந்நிலையில் நேற்று இரவு கிருஷ்ணமூர்த்தி கடைக்குச் சென்ற நேரத்தில் வீட்டில் தனியாக இருந்த கவிதா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.