தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

செல்போன் பறிப்பில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு காவல்துறை வலை! - சென்னை செய்திகள்

சென்னை: முடிச்சூர் பகுதியில் இருசக்கர வாகனத்தை திருடி, செல்போன் பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

police-web-for-youths-involved-in-cell-phone-robbery
police-web-for-youths-involved-in-cell-phone-robbery

By

Published : Feb 17, 2021, 2:21 PM IST

சென்னை தாம்பரம் அடுத்த முடிச்சூர் காந்தி தெருவைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். அவரது மகள் ராஜலட்சுமி (23). ராஜலட்சுமி ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்துவருகிறார்.

இந்நிலையில் வேலைக்கு செல்வதற்காக முடிச்சூர் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த ராஜலட்சுமியிடம், இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் செல்போனை பறித்து தப்பி சென்றுள்ளனர்.

பின்னர் இதுகுறித்து ராஜலட்சுமி பீர்க்கண்காரனை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். இந்தத் தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி செல்போன் பறிப்பில் ஈடுபட்ட நபர்களைத் தேடி வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், அந்நபர்கள் அதே பகுதியில் உள்ள லட்சுமி நகரில் இரு சக்கர வாகனம் ஒன்றை திருடிக்கொண்டு செல்போனை பறித்து சென்றது தெரியவந்தது. அப்பகுதியில் சிசிடிவி கேமராக்கள் அதிகளவில் போடப்பட்டும் தொடர் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதால் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: காப்புக் காட்டில் துப்பாக்கிகள் பறிமுதல்!

ABOUT THE AUTHOR

...view details