தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இருசக்கர வாகனங்களை திருடியவர்களுக்கு காவல் துறையினர் வலை - chennai theft news

சென்னை: இருசக்கர வாகனம் திருடியவர்களை காவல் துறையினர் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் தேடிவருகின்றனர்.

கொள்ளையர்கள்

By

Published : Oct 12, 2019, 2:53 PM IST

சென்னை புரசைவாக்கத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீபால். இவர் நேற்று காலை அதேப் பகுதியில் உள்ள ஜெயின் துறவியை சந்திப்பதற்காக இருசக்கர வாகனத்தை வெளியில் நிறுத்திவிட்டு உள்ளே சென்றார். பின்னர் திரும்பிவந்து பார்த்தபோது இருசக்கர வாகனம் மாயமாகியிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் இது குறித்து வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையில் அந்தப் பகுதியிலிருந்து சிசிடிவி காட்சிகளைக் கொண்டு கொள்ளையர்களைத் தேடிவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details