தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காவல் துறையினரின் வாக்கி டாக்கி மாயம்! - walkytalky

சென்னை: நுங்கம்பாக்கம் அருகே காவலர் வாகனத்தில் வைத்திருந்த வாக்கி டாக்கியை திருடி சென்ற நபரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

காவல்துறையினரின் வாக்கி டாக்கி மாயம்
காவல்துறையினரின் வாக்கி டாக்கி மாயம்

By

Published : Mar 19, 2021, 2:07 PM IST

சென்னை, கே.கே. நகர், காமராஜ் சாலையில் உள்ள மத்திய அரசு ஊழியர்கள் குடியிருப்பில் வசிப்பவர் அறிவழகன் (36). இவர் கீழ்ப்பாக்கம் சார்பதிவாளர் கூட்டுறவு வங்கி அலுவலகத்தில் கூட்டுறவு சார்பதிவாளராக பணியாற்றுகிறார்.

தற்போது, சார்பதிவாளர் அறிவழகன் ஆயிரம் விளக்கு தொகுதி, தேர்தல் பறக்கும் படை அலுவலராக உள்ளார். நேற்று (மார்ச்.18) இரவு நுங்கம்பாக்கம், மகாலிங்கபுரம் மேம்பாலம் அருகே வாகன சோதனையில் அவர் ஈடுபட்டிருந்தார்.

அப்போது, தனது வாக்கி டாக்கியை பறக்கும் படை வாகனத்தின் மீது மறந்து வைத்துவிட்டு சூளைமேடுவரை சென்று திரும்பி வந்து பார்க்கும்போது வாகனத்தில் வைத்திருந்த வாக்கி டாக்கியை காணவில்லை. இதுகுறித்து, அறிவழகன் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: இங்கெல்லாம் டிரைவ் பண்ண ஆசைப்படாதீங்க!

ABOUT THE AUTHOR

...view details