தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாஞ்சா நூல் பட்டம் விடுவோரைக் கண்காணிக்க புதிய நடவடிக்கை - காவல் துறை - Mancha thread

சென்னை: மாஞ்சா நூல் மூலம் பட்டம் விடுவோரை "ட்ரோன்" மூலமாக சென்னை காவல் துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

ட்ரோன் மூலம் கண்காணிக்கும் காட்சி
ட்ரோன் மூலம் கண்காணிக்கும் காட்சி

By

Published : Jun 9, 2020, 9:26 PM IST

கரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ளதால், கல்வி நிறுவனங்கள், பெரும்பாலான நிறுவனங்கள் மூடப்பட்டு, பொதுமக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.


இதனால் சென்னையில் இளைஞர்கள் சிலர் மாஞ்சா நூலில் பட்டம் விடத்தொடங்கி உள்ளனர். குறிப்பாக, சென்னையில் ஊரடங்கு காலத்தில் மாஞ்சா நூலால் காயமடைந்தோரின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதுகுறித்து, சென்னை காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் மாஞ்சா நூலில் பட்டம் விடுவோர் மற்றும் தயாரிப்பவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ், நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தார்.

ட்ரோன் மூலம் கண்காணிக்கும் காட்சி
அதனடிப்படையில் சென்னை முழுவதும் மாஞ்சா நூல் பட்டம் விடுபவர்கள் தெரிந்தால், தகவல் தெரிவிக்கலாம் எனக்கூறி, காவல் துறையின் முக்கிய இடங்களில் காவலர் செல்போன் எண்களுடன் விழிப்புணர்வு பேனர்கள் வைத்துள்ளனர்.
மேலும் உயரமான கோபுரங்கள் மூலம் பட்டம் விடுவோர்களைத் தீவிரமாக காவல் துறையினர் கண்காணித்து 8 நபர்களைக் கைது செய்தும் உள்ளனர்.
இந்நிலையில் மாடிகளில் இருந்து "ட்ரோன்" மூலம் பட்டம் விடுபவர்களைக் கண்காணிக்கும் பணியில், தற்போது காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக அயனாவரம், வியாசர்பாடி, கீழ்ப்பாக்கம், பெரியமேடு, சூளைமேடு போன்ற பகுதிகளில் ட்ரோன் மூலம் கண்காணிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் மூலம் பட்டம் விடுபவர்களை எளிதாகக் கண்டுபிடித்து கைது செய்யலாம் என காவல் துறை தரப்பில் கூறப்படுகிறது.

இதையும் படிங்க:மின்சார சட்டத்திருத்த மசோதாவை ரத்து செய்யக்கோரி மனு அளித்த விவசாயிகள்!

ABOUT THE AUTHOR

...view details