சென்னை: நங்கநல்லூர் மூவரசம்பட்டு ஊராட்சியில் அமைந்துள்ள தர்மலிங்கேஸ்வரர் கோவில் தீர்த்தவாரி நிகழ்வின் போது ஐந்து இளைஞர்கள் குளத்தில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு நேரில் சென்று சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் கோயில் நிர்வாகம் காவல்துறையிடம் முறையாக அனுமதி பெறவில்லை எனத் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து உயிரிழந்த நபர்களின் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்த குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் முறையாக அனுமதி பெறாத கோயில் நிர்வாகத்தினரிடம் விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க:'கலாசேத்திரா கல்லூரியை அவதூறாகப் பேசுவது எனது தாயைப் பேசுவது போல் உணர்கின்றேன்' - நடிகை அபிராமி