சென்னை:சென்னை ஓட்டேரி, எஸ்எஸ்புரம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக தலைமைச் செயலக காலனி காவலர்களுக்கு புகார் வந்தது. இதனையடுத்து அங்கு சென்ற உதவி ஆய்வாளர் மீனா தலைமையிலான போலீசார், கஞ்சா விற்பனை செய்து வந்த கார்த்திக் என்பவரைபிடித்தனர்.
ஆனால், அவரை கைது செய்ய எதிர்ப்பு தெரிவித்து 50க்கும் மேற்பட்டோர் காவல்துறையினரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அரைமணிநேரத்திற்குப் பிறகு கார்த்திக்கை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஜூலை 1ஆம் தேதி நடந்த இச்சம்பவம் தொடர்பான வீடியோ காட்சி தற்போது வெளியாகி உள்ளது. கைது செய்யப்பட்ட கார்த்திக் மீது ஏற்கெனவே திருவிக நகர் காவல்நிலையத்தில் கொலை வழக்கு நிலுவையில் உள்ளது.
போலீஸை சுற்றிவளைத்த கும்பல்! கடந்த மாதம் ஓட்டேரி பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்தவரை பிடிக்க சென்ற ஓட்டேரி காவல் நிலைய பெண் உதவி ஆய்வாளரை ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியதும், அது தொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:தாய், இரு குழந்தைகள் தற்கொலை - நெருங்கிய உறவினர்கள் கைது