காவல்துறை உதவி ஆய்வாளர் பணி நேர்முகத் தேர்வு - police sub inspector interview held at chennai
சென்னை: காவல்துறையில் உதவி ஆய்வாளர் பணிக்கான நேர்முகத் தேர்வு, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரிய அலுவலகத்தில் நேற்று (பிப். 23) நடைபெற்றது.
கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் காவல்துறை தேர்வுக்கான தேர்வு பட்டியல் ஒன்றை சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. இதில் 1 லட்சத்து 42 ஆயிரம் பேர் எழுத்து தேர்வில் பங்கேற்றனர். தேர்ச்சி அடைந்தவர்களுக்கு உடற்தகுதி தேர்வு நடத்தப்பட்டது. அதில் தேர்வானவர்கள் நேர்முக தேர்வுக்கு அழைக்கப்பட்டனர்.
969 பணியிடங்களில் பெண்களுக்கு 30 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. காவல்துறையில் பணிபுரிபவர்களுக்கு 20 விழுக்காடு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இதையடுத்து சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் நேற்று முதல் மார்ச் 2ஆம் தேதி வரை ஒரு வாரத்திற்கு தேர்வு நடைபெறுகிறது.